நாகை: இடைத்தேர்தலில் தவெக வெற்றி..... தலைஞாயிறில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

 


தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறில் தவெக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



தலைஞாயிறு கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்திற்கு தலைஞாயிறு பேரூர் கழக செயலாளர் ஆர்.என்.குமரவேல் தலைமை வகித்தார்.

இதில் தலைஞாயிறு மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், தலைஞாயிறு கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.ஏ.ஜெய்சங்கர், தவெக ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் எஸ்.கார்த்திக் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை  தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




தலைஞாயிறு கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தால் அப்பகுதியில் உற்சாகமான சூழல் நிலவியது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


Post a Comment

0 Comments