பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் பயிர் கடன் நகை கடன் ஆய்வு



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்குட்பட்ட G 1524 மெதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) திரு.ச. சுப்பிரமணியன்  அவர்கள், அனைத்து வகையான கடன் வழங்குதலின் முன்னேற்றம், ஆன்லைன் வாயிலாக பயிர் கடன் வழங்கும் பணிகள், மைக்ரோ ஏடிஎம் சேவையின் செயல்பாடுகள், இ-வாடகை, இ-சேவை,வேப்பம்புண்ணாக்கு.தயாரிப்பு,மற்றும் பிற துறை சார்ந்த  செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 



இதைத் தொடர்ந்து கோளூர் தேவம்பேடு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன். சங்க அலுவலகத்தில் ஆய்வு. மேற்கொண்டார்  இந்த ஆய்வின் போது மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் ஆ.க.சிவமலர், கூட்டுறவு சங்க செயலாளர்கள்.மெதுவூர். சசிகுமார். கோளூர் திருப்பதி. தேவம்பேடு சுமதி மற்றும்..பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி சரகத் துணைப் பதிவாளர்கள், சங்கசெயலாட்சியர், களமேலாளர்,துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments