ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி பேரூராட்சியில், சுமார் 18 ஏக்கர் பரப்பளவிலான பேரூராட்சிக்குச் சொந்தமான காலி இடம் சீரமைக்கப்பட்டு, புதிய விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.அதற்கு ஏபிஜே அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது
முன்னதாக, அந்த இடம் கருவேல மரங்கள் அடர்ந்து புதராகக் காணப்பட்டது. விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு தொண்டி பகுதி இளைஞர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், உத்தரவின் பேரில் அந்த இடம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.
தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ள இந்த மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான தனித்தனி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மைதானத்திற்கு 'ஏபிஜே அப்துல் கலாம் விளையாட்டு மைதானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவாடானை உட்கோட்டக் காவல் கண்காணிப்பாளர் (DSP) சீனிவாசன் கலந்து கொண்டு, நாடாவை வெட்டி மைதானத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் (சேர்மன்) ஷாஜகான் பானு, பேரூராட்சி நிர்வாகிகள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த புதிய மைதானம் அமைக்கப்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments