திருவாடானை அருகே கார்-பைக் மோதல்.... ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது மகள் படுகாயம்



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரும் அவரது மகளும் பலத்த காயமடைந்தனர்.

​திருவாடானை அருகேயுள்ள சூச்சனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தனது மகள் பிரதீபாவுடன் இருசக்கர வாகனத்தில் தேவகோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்ன கீரமங்கலம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிர் திசையில் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

​இந்த கொடூர விபத்தில், பைக்கில் சென்ற செந்தில்குமார் மற்றும் பிரதீபா ஆகிய இருவருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்தவர்களை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

​அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவாடானை காவல்துறையினர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments