புதுகும்மிடிப்பூண்டியை புதுமையான கும்மிடிப்பூண்டியாக மாற்றிக் காட்டுவேன்.... தவெக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயகுமார் உறுதி....



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் எஸ். கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் புது.கும்மிடிப்பூண்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பாக.80 வது சுதந் திரதினவிழாவை யொட்டி 5 ஆம் ஆண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 



இந்நிகழ்ச்சிக்கு புதுகுமிடிப்பூண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  சீனிவாசன், புதுகும்மிடிப்பூண்டி முன் னாள் துணைத் தலைவர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். எஸ் கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் குழுமத்தைச் சேர்ந்த எஸ். தீபிகா சதீஷ் வரவேற்புரைநிகழ்த்தினார்.



நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.புது கும்மிடிப்பூண்டி  தனியார் கம்பெனிகள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் இதை கவனத்தில் கொண்டு பல்வேறு கம்பெனிகளில் ஆய்வு மேற்கொண்டேன் மக்களுக்கு பாதிக்கப்படும் கம்பெனிகளுக்கு  கழிவுகள் கரும்  புகைகளால்.மக்களுக்கு பாதிப்புஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு உள்ளன்  புது கும்முடிபூண்டி.புதுமையான கும்மிடிப்பூண்டி மாற்றிக் காட்டுவதே என் லட்சியம் என பேசினார். தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியினை புதிய அலைகள் நிறுவன ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதில் த.வெ.க மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ். கே இன்ஜினியரிங்.ஒர்க்ஸ் குழுமத் தைச் சேர்ந்த டி பரத் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments