அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் தவெக நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு உடையார்பாளையம் நகர செயலாளர் ரஜினி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு நகர தவெக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், மனோகரன், கண்ணன் , தினேஷ்,மாவட்ட பொறுப்பாளர்கள் நடராஜன், செல்வக்குமார், துணை செயலாளர்கள் அரவிந்த், மனோகர், வரதராஜன் பேட்டை நகர செயலாளர் பவுல்ராஜ்,நகர ஆலோசகர்கள் சங்கர், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பிரேமா, கற்பகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர,தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



0 Comments