பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம்   பொன்னேரி வட்டம்  ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளுர்  கிராமம்    பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன்  ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது  ஆண்டுதோறும்  தீமிதி திருவிழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து  கடந்த 31 ஆம் தேதி பந்தக்கால் உடன் தொடங்கி  கணபதி ஹோமம்  நடைபெற்று கூழ் வர்த்தல், வாடை பொங்கல், தீபாரத்தனை, அம்மன் அழைப்பு உள்ளிட்டவை நடைபெற்றது.



 அதனை   தொடர்ந்து  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  திரளான பக்தர்கள்  காப்பு கட்டி விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தீமிதித்து  தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்  அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அசம்பாவிதம்  கவரப்பேட்டை  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 



நிகழ்ச்சி ஏற்பாடை    கொள்ளுர்  கிராம   பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டி ஜெ எஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments