திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து தேவராஞ்சேரி, ஏறுசிவன், ஆசானபுதூர், வஞ்சிவாக்கம் வழியே பழவேற்காடு செல்லும் புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. பொன்னேரி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ரவி கொடியசைத்து இந்த பேருந்து சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து அரசு பேருந்தில் ஏறி மக்களுடன் பயணித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் அவதியடைந்து வந்ததாகவும், தற்போது பேருந்து சேவை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பேருந்து சேவையும் தங்களுக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை எனவும், சுதந்திர போராட்டத்தை போல பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த பேருந்து சேவை தங்களுக்கு கிடைத்திருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தனர். 50ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து முழுவதும் மாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரித்து பூஜை செய்யப்பட்டு புதிய வழித்தடத்தில் பயணத்தை துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து பொன்னேரி பொது மேலாளர் பாஸ்கர், மனோகர், ஊராட்சி செயலார்கள் ரமேஷ் மற்றும் நவமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சசிகுமார் வட்டாரத் தலைவர் முத்துகுமார் வழக்கறிஞர் ராம்கி, தொழிலதிபர் ஏடிஎஸ் சந்தானம், ஆசான புதூர் ரமேஷ்,மடிமை டில்லி, சத்யா, பிரபாகரன், பானு, மாரிமுத்து, இதில் தவெக ஒன்றிய செயலாளர் ஜெய் லட்சுமிபுரம் சதீஷ் , குமரஞ்சேரி குமரன், கம்மார் பாளையம் சுரேஷ் உள்ளிட்ட கிராம மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.



0 Comments