பொன்னேரியில் மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் மொத்தம் 522 பயனாளிகளுக்கு ரூ.10,30,22,300 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது



திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆலாடு கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா,புதிய குடும்ப அட்டை,உட்பிரிவு பட்டா மற்றும் வேளாண்மை துறை,தோட்டக்கலை,மாற்று திறனாளிகள் நலத்துறை,சமூக நலத்துறை,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் வீட்டுமனை பட்டாவினை 281 பயனாளிகளும்,புதிய குடும்ப அட்டையினை 47 பயனாளிகளும்,உட்பிரிவு பட்டா தொடர்பான பயன்களை 32 பயனாளிகளும், வேளாண்மை துறையில் 6,தோட்டக்கலையில் 19 பயனாளிகளும் சாலை விபத்து நிவாரணத் தொகை 11 பயணிகளுக்கும்,மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 பயனளிகளுக்கும் முழு புலப்பட்டா 124 பயனாளிகளுக்கும் என மொத்தம் 522 பயனாளிகளுக்கு 10,30,22,300 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர் பிரபு வரவேற்புரை ஆற்றினார். பொன்னேரி சாராட்சியார் அப்துல் ராஷிக் முன்னிலை வகித்தார்.

 மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர்கள்.வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments