திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இத்திருக்கோவிலில்,6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குறிப்பாக இத்திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில்,கடந்த 68 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 12 உண்டியல்களில் இருந்த பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் நேற்று காலை முதல் இரவு வரையில் நடைபெற்றது.பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலின் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் உதவி ஆணையர் சிவஞானம், ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1கோடியே 10லட்சத்து 91 ஆயிரத்து 335 ரூபாயும்,தங்கம் 69.270 கிராமும்,வெள்ளி 7கிலோ 158 கிராம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். சிறுவாபுரி ஊர் பிரமுகர் கூறியது ஆடி மாத முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வந்ததால் காணிக்கை ஒரு கோடிக்கு மேல்காணிக்கை வந்ததாக ஊர் பிரமுகர் சிறுவாபுரி ரமேஷ் தெரிவித்தார்.



0 Comments