தண்டலச்சேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது



 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  வட்டம் தண்டலச்சேரி கிராமத்தில்  அமைந்துள்ள அருள்மிகு   ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவில் பக்தர்கள் நிதி உதவியுடன்   அண்மையில்  புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில்  கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 



முன்னதாக விழாவையொட்டி கடந்த 11 ம் தேதி யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி குபேர பூஜை,தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி,   முதலாம் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை,   சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 



பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பக்தர்கள் மனம் உருகி    வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை தண்டலச்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர் மேலும் கிராம நிர்வாகிகள் குலசேகரன், ரவிச்சந்திரன், ஞான காந்தி, வெங்கடேசன், மன்னன், லோகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தண்டலச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், தொழிலதிபர்  பாரிவேந்தன் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து  அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது .

Post a Comment

0 Comments