நாகை அருகே மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில் முனைவோர் காண நிகழ்ச்சி



 நாகப்பட்டினம் மாவட்டம், ஈசனூரில் அமைந்துள்ள அரிஃபா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில், மாணவர்களின் புதுமையான யோசனைகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறைத் திட்டங்களாக மாற்றும் நோக்கில் ‘Dream2Reality – Idea Competition’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் சுமார் 80 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது புதுமையான யோசனைகளை முன்வைத்தனர். பங்கேற்பாளர்கள் தங்களது யோசனைகளின் பயன்பாடு, செயல்படுத்தும் சாத்தியம் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.



மாணவர்களின் படைப்பாற்றல், புதுமைச் சிந்தனை, தொழில்முனைவோர் திறன் மற்றும் யோசனையின் செயல்படுத்தும் சாத்தியம் ஆகிய பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் முடிவில் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

இப்போட்டி மூலம் மாணவர்கள் தங்களது எண்ணங்களை நடைமுறைத் திட்டங்களாக மாற்றுவதற்கான வாய்ப்பையும், தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுபவத்தையும் பெற்றனர். மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.



Atlas Copco Group, PSG STEP மற்றும் Trident நிறுவனங்களின் CSR முன்னெடுப்பின் கீழ், மாணவர் புதுமைக்கான நிதி ஆதரவை மையமாகக் கொண்டு நடைபெற்ற ‘Dream2Reality – Idea Competition’, மாணவர்களின் புதிய சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments