இம்மானுவேல் சேகரனார் நினைவுதினம்..... உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்

              


விடுதலைப் போராட்ட வீரரும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-ஆவது நினைவு நாளான 11-9-2026 ல்  தி.மு.கழகத்தின் சார்பில்,ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில்  திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார். உடன் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகண்ணப்பன் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பண் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .

தியாகி இம்மானுவேல் சேகரனாரின்  நினைவையும், அவரது ஈடு செய்ய முடியாத தியாகத்தையும் போற்றும் வகையில், திமுக கழகத்தலைவர்  முக ஸ்டாலினின்  தலைமையிலான கடந்த ஆட்சியில் வெண்கலச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் பரமக்குடியில் கட்டப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது .அவருக்கு புகழ் சேர்க்கும் மணிமகுடம் என்றனர்.

Post a Comment

0 Comments