சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள புதுவயல் புதுவயல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சாக்கோட்டை. இந்தப் பகுதியில் வரலாற்று புகழ் பெற்ற சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சாக்கை அருள்மிகு வீரசேகர உமயாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வரலாற்று புகழ் பெற்றது என்றாலும், வரலாற்றை பறைசாற்றுகின்ற கோவிலின் எதிர்ப்புறம் உள்ள சோழ குளம் என்கின்ற மிகப்பெரிய ஊரணி அழிந்து வருவதை கண்டு அங்கு வரும் பக்தர்கள் மனம் வருந்தி செல்லும் நிலையில், கோவிலின் அருகாமையில் மருது பாண்டியர்களின் போற்பயிற்சி மற்றும் புகலிடமாக விளங்கிய தேவகோட்டைக்கு அருகே உள்ள சங்கரபதி கோட்டைக்கும் சாக்கோட்டைக்கும் தொடர்பு இருந்ததாக வரலாறுகள் பறைசாற்றுகிறது
இந்தக் கோட்டை அமைந்துள்ள இடம் அரசு ஆவணங்களின்படி காட்டுப்பகுதி என்று இருந்தாலும், கோட்டையினை அழித்து இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் மக்களோடு பேரூராட்சி நிர்வாகமும் விடவில்லை, இதைப் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் வரலாற்று புகழ்மிக்க பகுதியாக விளங்கி பெருமைமிக்க கோட்டை கொண்ட கோட்டையை அழித்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்து வரும் சமூக ஆர்வலர்கள், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கோட்டையை கைப்பற்றி பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, பாதுகாக்க தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


0 Comments