ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தவெக பாஜக பிளக்ஸ்சுகளை மட்டும் பேரூராட்சியினர் அகற்றினார்கள் இதனை கண்டித்து கமுதி பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் உத்திரவின்படி பிளக்ஸ் அகற்றியது சட்டத்தற்கு புறம்பானது பேனரை மீண்டும் வைக்க வேண்டும் அல்லது கமுதியில் உள்ள எல்லா கட்சி மற்றும் பிற பேனர்களையும் பாரபட்சமின்றி அகற்றிடவேண்டும் அது வரை தவெக பாஜக தொடர் போராட்டம் நடத்துவோம் என தவெக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.மதன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் பேரூராட்சியை கண்டித்து கோஸங்களை எழுப்பினார்கள் இதே போல பாஜக பிளக்ஸ் பிரதமர் படம்போட்டு 125 நாள் வேலைஉறுதி திட்டத்தினை தெரியபடுத்தும் விதமாக வைத்திருத்தனர் அதனையும் பேரூராட்சியினர் அகற்றினர் இதனால் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டமாக வந்து செயல்அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் வெளியில் வந்து தவெகவினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் தகவலறிந்து வந்த போலிஸ்இன்ஸ்பெக்டர் சார்புஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேரூராட்சி பிளக்ஸ்களை எடுத்ததற்கு காரணம் ஞாயிறு இரவு திமுக பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இருப்பதால் இடையூறு இல்லாமல் இருக்கவே எடுக்கப்பட்டதாக சர்வகட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர் அமைதியாக இருந்த கமுதியில் பிளக்ஸ்பேனரை வைத்து மோதல் ஏற்படாவண்ணம் காவல்துறையினரும் வருவாய்துறையினரும் கண்காணித்து இனி பிளக்ஸ்பேனர் வைப்பது என்றால் அனமதி கட்டாயம் என்பதனை பிளக்ஸ்பேனர்மூலம் அறிவிப்பு வைத்து அதனை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என கமுதி நகரபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments