திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவுத்தின்படி சமத்துவ பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்ம பிரகாஷ் ஏற்பாட்டில் அத்திப்பட்டில் நடைபெற்றது.
இதில் மாநில அம்மா பேரவை இணை செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன் ராஜா கலந்து கொண்டு இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர்ந்து கோலப்போட்டி நடைபெற்றது.
இதில் முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு ரொக்கம் வழங்கப்பட்டது தொடர்ந்து ஆயிரம் பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆர் டி எஸ் ராமு அலெக்ஸ் பாண்டியன் கருணாகரன் ரமேஷ் பிரபாகரன் சங்கர் தினகரன் சதீஷ் சசி திராவிட செல்வன் மீஞ்சூர் பேரூர் கழக அவை தலைவர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






0 Comments