திருவள்ளூர்: அதிமுக கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது





திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி  எஃகுமதுரை ஊராட்சியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி  மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலையில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில்  நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 தொடர்ந்துவருகின்ற 2026-ல்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியை தமிழக முதலமைச்சராக்க இந்த தை மாதத்தில் உறுதி ஏற்க வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்  முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் இதில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் டேவிட் சுதாகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .



Post a Comment

0 Comments