தமிழக அரசியலின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள், தற்போதைய சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் (OPS) ஒரு அரசியல் ஆலோசகராகப் பயணித்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் மிகுந்த காலதாமதம் செய்து வருவதால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, சமீபத்தில் வைத்திலிங்கம் அவர்கள் திமுக-வில் இணைந்தது ஓபிஎஸ் தரப்பிற்கு ஒரு பேரிடியாக அமைந்தது.இந்த வரிசையில், தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் ஓபிஎஸ்-ன் மெத்தனப்போக்கால் எரிச்சலடைந்து, ‘MGR அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. அதிமுக-வின் அடையாளத்தை மீட்டெடுப்பதே இந்த புதிய கட்சியின் நோக்கமாக இருக்கும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தத் தகவல் மட்டும் உண்மையானால், ஓபிஎஸ் தரப்பு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.

0 Comments