நான் அமைச்சர்களை பார்க்க சென்றேன்..... எடப்பாடி பழனிச்சாமியை அல்ல..... தனியரசு விளக்கம்

 



தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியிலும் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. இந்த நிலையில், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது. எனினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில், நான் எடப்பாடியை சந்திக்க வில்லை என தனியரசு மறுப்பு தெரிவித்துள்ளார். பசுமை வழிச்சாலையில் திமுக அமைச்சர்களின் வீடுகள் உள்ளன. அதே சாலையில் தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் உள்ளது. அந்த வழியாக தனியரசு சென்றபோது எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் என தவறான தகவல்கள் பரவியது.

இது தொடர்பாக தனியரசு கூறிகையில், “அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சக்கரபாணியை தான் பார்க்க சென்றேன். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை. பசுமை வழிச்சாலை வழியாக அமைச்சர்களை பார்க்கவே சென்றேன். எடப்பாடியை சந்தித்தேன் என்பது தவறான தகவல்” என கூறினார்.

Post a Comment

0 Comments