சிவகங்கை மாவட்டம் கண்டனூர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இன்று பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால், மருத்துவமனைக்கு வந்த மருத்துவ பயனளிகள் வாயில் முன்பு அமர்ந்திருந்தனர், இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அருள்தாஸ் என்பவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மருத்துவமனை என்றால் அவ்வாறுதான் இருக்கும் என்றும், மருத்துவ பயனாளிகள் காத்திருந்து வைத்தியம் பார்த்து செல்ல வேண்டும் என தெரிவித்தார், அங்கிருந்த பின் மருத்துவர் ஒருவர் செய்தியாளரை மிரட்டும் தோரணையில் ஈடுபட்டார், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு நின்ற மருத்துவ பயனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments