இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ,ஆண்டு விழா மற்றும் 77 ஆம் ஆண்டு குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் தலைவர் முஜிப் ரஹ்மான் மற்றும் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,பள்ளி தாளாளர் சிராஜுதீன் தலைமை வகித்தார்,ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிசா வரவேற்புரை நிகழ்த்தினார்,விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அல்பய்யினா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜாஃபிர் சுலைமான் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை முதுநிலை விரிவுரையாளர் பிரபாகர், காவல் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் ஆண்டுவிழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேன்மொழி பெ.மல்லிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர், (பொறுப்பு) சேதுபதி வாழ்த்துரை வழங்கினார்கள், இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு அணிவகுப்பு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி, குறிப்பாக ராம்ப் வாக், கராத்தே, சிலம்பம், ஆகியவை மாணவ மாணவிகள் நிகழ்த்தி காட்டினர். இதில் நம் பள்ளி பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பிற பள்ளி தாளாளர்கள் தலைமை ஆசிரியர்கள்; ஆசிரியர் பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 Comments