கல்லல் ஊராட்சியில் ஆதிதிராவிட நலத்துறையால் செல்வந்தர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 


சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம், கல்லல் ஊராட்சி யில்ஆதிதிராவிட நலத்துறையால் புல எண் 240/7 A என்ற இடத்திற்கு, அரசு அறிவித்தபடி இல்லாமல் பெரும் செல்வந்தர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக் கோரியும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லு பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக் கோரியும், மருங்கிப்பட்டி புல எண் 185/2 ல் சுமார் இரண்டு ஏக்கர் களம் புறம்போக்கு, சுடுகாடு ஆக்கிரமிப்பு இவைகளை அகற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கல்லல், அக்ரஹாரம் பகுதியில் ஒன்றிய செயலாளர் குணாளன் தலைமையிலும் சித்திரை குமார், நாச்சியப்பன் இவர்களின் முன்னிலையில்நடைபெற்றது.

 இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் சாத்தையா ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள், இந்த நிகழ்வில் நூற்றுக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள்.

Post a Comment

0 Comments