தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உதயநிதி கோப்பை கிாிக்கெட் போட்டி மற்றும் பாிசளிப்பு விழா மீளவிட்டான் என். பொியசாமி திடலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஆகிேயாா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா் வரவேற்புரையாற்றினாா்.
கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மொத்த அணிகளுக்கு பாிசுத்தொகை 3 லட்சத்து 10 ஆயிரம் பாிசுக்கோப்பை ஆறுதல்பாிசு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிசா்ட் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்பிறந்தநாள் விழாவையொட்டி இந்த கிாிக்கெட் போட்டி கடந்த ஆண்டு நவம்பா் 2ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு 4ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது. இது தொடர் விளையாட்டு போட்டியாக லீக் முறையில் பகுதி மண்டலம் மாநகரம் என நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் வடக்கு மாவட்ட திமுக அனைத்து அணிகளை சாா்ந்தவா்கள் களம் இறங்கி விளையாடியது எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளன. காரணம் போட்டியில் கலந்து கொண்டதே முதலில் நமக்கு பொிய வெற்றிதான் தோ்தல் முன்னெடுப்பின்காரணமாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை எஸ்ஐஆா் வாக்காளர் சோ்க்கை என தொடர்ந்து நம்முடைய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
முதல்வா் ஸ்டாலின் , துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி முன்னெடுப்பில் பல்வேறு பணிகளை நாம் செய்துள்ள போதும் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் எல்லாத்துறையிலும் வளர்ச்சி இந்தியாவில் நம்பா் ஒன் மாநிலமாக தமிழ்நாடும் நம்பா் ஒன் முதலமைச்சராக தளபதியாரும் இருந்து வருகிறாா். அரசு ஊழியா்களின் 23 ஆண்டுகால கோாிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றிகொடுத்துள்ளாா். இது ஓரு வரலாற்று சாதனையாகும். இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைத்து முதலமைச்சராக ஸ்டாலின் அாியணையில் அமர வேண்டும் அதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும். பொங்கல் பாிசாக அாிசி சா்க்கரை கரும்புடன் ஒவ்வொரு ரேசன் அட்டைதாரா்களுக்கு ரூ 3 ஆயிரம் வழங்கப்படுகிறது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த நல்லாட்சி தொடா்வதற்கு அடுத்த கட்டமாக பொங்கல் திருநாளையொட்டி முதலமைச்சர் தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெண்கள் ஆண்கள் என எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் கபடி கிாிக்கெட் கைப்பந்து கால்பந்து கூடைபந்து என பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்படி தொடா்ந்து பல்வேறு பணிகளை மக்களுக்காகவும் நாம் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிா்பாா்ப்புகளை மிஞ்சும் வகையில் வடக்கு மாவட்ட திமுக செயல்படும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வதுடன் இளைஞர் அணியினா் சிறப்பாக நடத்தி பெருமை சோ்க்கும் வகையில் 115 அணிகளை ஓருங்கிணைத்து மிகப்பொிய சாதனையை செய்துள்ளதற்கு பாராட்டு தொிவித்தாா்.
விழாவில் மாநில இளைஞர் துணை செயலாளர் இன்பாரகு, துைண மேயா் ஜெனிட்டா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மகளிா் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ்இளம்பாிதி, மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளர் கோகுல்நாத், பகுதி செயலாளா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாநகர துணை செயலாளா் பிரமிளா, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணைத்தலைவா் செந்தில்குமாா், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாவட்ட அணி தலைவர்கள் பழனி, செல்வி, மாநகர இளைஞர் அணி துைண அமைப்பாளர்கள் செல்வின், ரவி, சங்கரநாராயணன், பிரவீன்குமாா், முகமது ஜெயலாப்தீன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் பெல்லா, மகளிா் அணி துணை அமைப்பாளா் சந்தனமாாி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, கவுன்சிலா்கள் ஜெயசீலி, வைதேகி, சுப்புலட்சுமி, ஆறுமுகம், வட்டச்செயலாளர்கள் காளித்துரை, சதீஷ்குமாா், சந்தனமாாிமுத்து, பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யகாந்த், ராமசந்திரன், ராஜாமுனியசாமி, செந்தூா்பாண்டி, நிா்மல் சரவணக்குமாா், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, விளையாட்டு அணியை சோ்ந்த வீரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் ராஜா பொியசாமி நன்றியுரையாற்றினாா்.

0 Comments