கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பெண்களுடன் ராமச்சந்திர ராவ் இருப்பதை யாரோ மர்ம நபர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதில் அவர் அலுவலக அறையிலேயே, பல்வேறு பெண்களுடன், ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த பரபரப்பான வீடியோ வைரலானதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. அளவிலான அதிகாரி, அரசு அலுவலகத்தில் நடந்து கொண்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.
இந்த சூழலில், டி.ஜி.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரி ராமசந்திர ராவை கர்நாடக அரசு இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளது. வீடியோ விவரங்கள் முதல்-மந்திரிக்கு தெரிந்ததும் அதனை பார்த்து அவர் கடுமையான கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
காவல் காக்கும் இடத்தில் இதுபோன்ற சம்பவம் எப்படி நடைபெற கூடும் என கேட்டு, அதுதொடர்பான விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொண்டார். இதனால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடியும் அதிகரித்து உள்ளது. அரசு, முறையான விசாரணை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
அந்த வீடியோவில், அலுவலக நேரத்தில் பல்வேறு பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு தருணங்களில் பல பெண்கள் வெவ்வேறு ஆடைகளில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வந்து செல்லும் காட்சிகள் யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. அவர் கர்நாடக உள்துறை மந்திரியையும் சந்தித்து சர்ச்சை விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும், அரசு சஸ்பெண்டு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவர், 14.8 கிலோ எடை கொண்ட தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ஆவார்.

0 Comments