தமிழ்நாடு சட்டமன்றத்தில் சத்துணவு ஊழியர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதன் விளைவாக சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வும், ஒட்டுமொத்த தொகை உயர்வுக்கும், சத்துண ஊழியர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைத்திடவும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கான ஈமை கிரியை நிதி வழங்கியும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட காரணமாக இருந்த நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலியை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் வே.சித்திரா, மாவட்ட தலைவர் த.சசிகலா, மாவட்ட செயலாளர் கே.பாலாம்பாள்,, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் த.ஸ்ரீதர், மாவட்ட துணை தலைவர் ப.அந்துவன்சேரல், முன்னாள் மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கா.இராஜு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


0 Comments