நம்பியூர் அருகே உள்ள ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு தர்மகர்த்தா லோகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்



ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில்   பௌர்ணமியை  முன்னிட்டு  சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு  அபிஷேகம் செய்த பிரசாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு  செய்திருந்தார்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments