கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் சார்பில் கண்டனம்


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த போது, மக்கள் பயன்பாட்டிற்காக நிர்வாக அலுவலகத்திற்கு, கீழக்கரை தனவந்தர்களால், விசாலமான இடம் கொடுத்து, அலுவலக கட்டிடமும் கட்டி கொடுத்தனர்.கீழக்கரை மக்களுடைய இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தை, மக்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், புதிய அலுவலகம் கட்ட, வரலாற்று நினைவுச் சின்னமாக திகழும் கட்டிடத்தை இடிப்பதற்கு, கீழக்கரை நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு கீழக்கரை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் செயலை புது கிழக்குத் தெரு பொது நல சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments