தமிழகத்தில் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை, சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை, ₹3,000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.நாகை மாவட்டத்தில் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர் இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 390 நியாய விலை கடைகள் மூலம் புழக்கத்தில் உள்ள 2 லட்சத்து 19, ஆயிரத்து 309 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட உள்ளது.

0 Comments