சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட, சாக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பணத்துடன்வழங்கப்படும் சேலை, வேட்டி இவைகள் இரண்டையும் வழங்காமல், ஏதாவது ஒன்றை வழங்கி வருவதாகவும் செய்திகள் கிடைத்த நிலையில், இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது வேட்டி, சேலை இவைகள் இரண்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் தகவல் சொல்லிய நிலையில் அதை பொருட்படுத்தாது மீண்டும் குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது, இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களிடம் விசாரணை செய்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுவதோடு இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

0 Comments