கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆய்வு செய்தார்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி வருகிற 10ந்தேதி (சனிக்கிழமை) பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15ஆயிரம், 3, 4ம் பரிசுகள் தலா ரூ.7 ஆயிரம், 5 முதல் 8ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் அனைத்து பரிசுகளுக்கு வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டி நடைபெறும் விளையாட்டு மைதானத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, குருசிங், பெரியார் திலீபன், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments