தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவுப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி இந்த விழா நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் S.ரோஸ் பொன்னையன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆரணி பேரூர் கழகச் செயலாளர் P. முத்து தலைமை தாங்கினார்.
தோட்டக்காரர் தெரு மசூதி அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 பெண்களுக்குப் புடவைகளும், 500 கழக நிர்வாகிகளுக்கு டீ-சர்ட் என மொத்தம் 1000 பேருக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கிழக்கு மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் S. ரோஸ் பொன்னையன் பேசுகையில்:
"கழக ஆட்சியில் மகளிருக்காக விடியல் பயணம் (இலவச பேருந்து வசதி), கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் 3000 உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நலப்பணிகள் தொடர, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் எழுச்சியோடு பணியாற்றி மீண்டும் கழக ஆட்சியை அமைக்க வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் பேரூர் கழகப் பொருளாளர் கு.கரிகாலன், துணைச் செயலாளர்கள் D.கோபிநாத், R.கலையரசி, கவுன்சிலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்ட நெசவாளர் அணி நிர்வாகிகள் B.S.குருவப்பா, T.ஜெயக்குமார், விவசாய அணி உதயகுமார், வார்டு செயலாளர்கள் C.நீலகண்டன், பாலகுருவப்பா, K.சூர்யா, S.பிரபு குமார், சாய் சத்தியா, சாலேக், J.மகேந்திரன், வழக்கறிஞர்கள் ஜெகநாதன், கவியரசு, சுரேந்தர் மற்றும் IT விங் சந்தோஷ், பிரபா கருணா, பொறியாளர் அணி B.பிரபாகரன், சிறுபான்மையணி M. சுல்தான், கவுன்சிலர்கள் D. பாஸ்கர், T.சுந்தர், செல்வகுமார் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த கலையரசி, மகேஸ்வரி, ஜெயந்தி மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,பிற அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







0 Comments