திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பீம் அட்வகேட் அசோசியேசன் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தலை மூத்த வழக்கறிஞர்கள் மோகன்,ராதாமணவாளன்,கருணாநிதி,ஆறுமுகம் கொண்ட நால்வர் குழு நடத்தினர்.தலைவராக போட்டியின்றி வழக்கறிஞர் பெரவள்ளூர் செ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக வழக்கறிஞர் விஜயும் பொருளாளராக வழக்கறிஞர் திருநாவுக்கரசும் நியமிக்கப்பட்டன. சங்க கௌரவ தலைவராக வழக்கறிஞர் மகேந்திரன் ராஜ்,சங்க ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் டி.காந்தியும்,துணைத் தலைவர்களாக வழக்கறிஞர்கள் சக்கரபாணி,சைமன்,துணை செயலாளர்களாக வழக்கறிஞர்கள் கார்த்திக்,ஆர்மி வெற்றி,பிரகாஷ்,பிரபு, இணை செயலாளர்களாக வழக்கறிஞர்கள் சூர்யா முத்துராமன் சீனியுவராஜ், சுரேஷ் சுரேஷ் விளையாட்டு துறை செயலர்களாக திருகுமரன்,ஞானசேகரன்,கௌதம், நூலகர்களாக வழக்கறிஞர்கள் விக்னேஷ்,கந்தவேல்,லெனின் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக குழுவை ஏகமனதாக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாகவும் நிர்வாக குழுவிற்கு ஒரு வருட காலம் பணிக்காலம் மீண்டும் கூடி புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யப்படும் எனவும் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் மேற்கண்ட கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் முறையாக அனுமதி பெற்று தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் வழக்குவிஞர்களின் சேமிப்பாக நிதி திரட்டி வழக்கறிஞர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் எனவும் முறையான அனுமதியோடு இனிமேல் இந்த நிர்வாக குழு செயல்படும் எனவும் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சோழவரம்,மீஞ்சூர்,செங்குன்றம்,ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments