திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டம்-2025-26ன்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி பொன்னேரி ஜெய் கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு பதாகளை ஏந்தி பள்ளி சேர்க்கை மற்றும் மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கு வருவது குறித்த கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்தை பள்ளியின் தலைமை ஆசிரியை பி.கே.கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலமானது பொன்னேரியின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்து அடைந்தது. இந்த ஊர்வலத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு எம்.செந்தில்ஆனந்த், ஆசிரியர் பயிற்றுனர் எம்.கௌரி,சிறப்பு பயிற்றுநர்கள் டி.ஜமுனா,என்.செபஸ்டின்,எஸ்.சுகந்தி, எம்.ரம்யா, எம்.சுபாஷினி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.


0 Comments