சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 296 பிறந்தநாளை முன்னிட்டு வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்,
முதல் பெண் போராளி வீராங்கனை, சுதந்திர போராட்டத்தை முதல் பெண் போராளியாக முன்னெடுத்தவர் வீரத்திலும் விவேகத்தில் சிறந்து விளங்கியவர் 10 மொழிகளுக்கு மேல் பேசகூடியவர் தன் கணவர் மறைவுக்கு பிறகு எட்டு ஆண்டுகளில் சிவகங்கை சீமையை மீட்டெடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் முதல் பெண் போராளி என்றார். முதல்வர் அறிவுரைப்படி வீர வணக்கம் செலுத்தி இருக்கிறோம். இந்தியாவின் வரலாறு முதன்முதலாக தென் தமிழகத்திலும் அதிலும் குறிப்பாக சிவகங்கை சீமையிலே இருந்து எழுதப்பட்டது என்பதை இந்தியாவிற்கும் உலகிற்கும் அறிவிக்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக வேலுநாச்சியாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக காந்தி மண்டபத்தில் சிலை அமைத்துள்ளார். மதுரையில் கட்டிமுடிக்கப்பட்ட பாலத்திற்கு வேலுநாச்சியாரின் பெயரை சூட்டி உள்ளார். வேலூர் காவலர் பயிற்சி மையத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டிக் உள்ளார். வேலுநாச்சியார் பற்றிய வரலாற்றை பாட புத்தகங்களை இடம் பெற முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார் என்றார். பாராளுமன்றத்தில் இந்திய கடற்படை கப்பலுக்கு வேலு நாச்சியார் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்காதது குறித்த கேள்விக்கு தொடர்ச்சியாக நம்முடைய தமிழ் மரபு வரலாற்றுடைய சீரிய பெருமையை மறைக்கின்ற முயற்சியில் தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது இரும்பின் தொண்மையை மாண்புமிகு முதலமைச்சர் 4000 ஆண்டுகளுக்கு முன்பாக நதிக்கரை நாகரீகமான வைகை கரையில் தொடங்கப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளார்.இது வரலாற்று புராணக்கதை அல்ல. அதை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது.தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை நமது முதல்வர் முயற்சி எடுப்பார் என்றார்.

0 Comments