பொங்கல் பரிசு பணத்தில் ஆண்கள் மது குடிக்க வேண்டாம்...... கமுதியில் நடைபெற்ற உதயநிதி பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பணத்தில் ஆண்கள் மது குடிக்க வேண்டாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.

கமுதி திமுக மத்திய ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்,  முன்னிலையில் இவ்விழாநடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறைஅமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 1048 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அப்போது முதுகுளத்தூர் தொகுதிக்கு   என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால் இப்பகுதியில் உள்ள அனைத்து பாசன கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்க.  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்கமுதியில் தொழிற்சாலை தொடங்கப்படும். முதுகுளத்தூர் தொகுதி மக்களின் ஏழ்மையை போக்கி. பொருளாதாரத்தில் மேம்பட திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று கூறினார். 

மேலும் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் இளம் வயதிலேயே பெண்கள் கணவரை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனால் அரசு வழங்கும் பொங்கல் பணத்தில் இளைஞர்கள், ஆண்கள் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். விழாவில், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ், மாநில தீர்மானக்குழு தலைவர் சுபதிவாகர்,  ஒன்றிய அவைத்தலைவர் கிழவராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தங்கப்பாண்டி, நீதிராஜன், முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன்,ஜெயபால், ஹரிமுத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் நாகரத்தினம்,பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜிசரவணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன், முன்னாள் கிளை செயலாளர் வாட்டர்போர்டு முத்துராமலிங்கம் உள்பட 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments