அதிமுக – பாமக கூட்டணி செல்லாது..... அறிக்கை வெளியிட்ட ராமதாஸ்

 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகின.இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக சம்மதித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக தரப்பிலிருந்து இதற்கு அதிரடியாக ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி ராமதாஸ் மட்டுமே பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்றும், அவரே கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் முதல் ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.எனவே, அன்புமணி ராமதாஸோ அல்லது வேறு எவரோ கூட்டணி குறித்துப் பேசுவது சட்டவிரோதமானது என்றும், ராமதாஸைத் தவிர வேறு யாருடனும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் திட்டவட்டமாக விளக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments