சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக வெற்றிக்கழக நிறுவனர் விஜய் உத்தரவுக்கிணங்க கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தலைமையில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் இணை செயலாளர் சீனிவாச சேதுபதி ஆகியோர் புதிய தவெக அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொள்கைதலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய வீர பெண்மணி வேலு நாச்சியாரின் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நலதிட்ட உதவியாக சைக்கிள் வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் நகரக் கழக கிளைக் கழக சார்பணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

0 Comments