திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றபோது, அங்கிருந்த தொண்டர் ஒருவரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அவரது தொண்டர் ஒருவர் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரிடம் கேக் வெட்டுமாறு கேட்டுள்ளார். ஆனால், அது ஒரு இரங்கல் நிகழ்ச்சி என்பதால், “இது துக்க நிகழ்ச்சி, கொஞ்சம் பொறுங்கள்” என்று திருமாவளவன் பக்குவமாகத் தெரிவித்துள்ளார்.
தலைவர் அவ்வாறு கூறியதால் ஆத்திரமடைந்த அந்தத் தொண்டர், தான் கொண்டு வந்த கேக்கை கோபத்தில் மேடையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். இதைப் பார்த்து திருமாவளவனும் “5 நிமிஷம் பொறுப்பா துக்க நிகழ்ச்சின்னு தானே சொன்னேன், ஏன்பா அவசரப்படுற” என்று கேட்டிருப்பார். திருமாவளவன் முன்னிலையிலேயே கேக் வீசப்பட்ட இந்தச் சம்பவம் அங்கிருந்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. தொண்டரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments