கும்மிடிப்பூண்டியில் முற்றிலும் இலவசமான முதல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மைய துவக்க விழாவில் முன்னாள் தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கவுரையாற்றினார்

 


கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் காந்தி உலக அறக்கட்டளை மற்றும் ஜீவிதா ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கும்மிடிப்பூண்டியில் டி.என்.பி.எஸ்.சி பயிற்சியளிக்கும் முதல் பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு கலந்து கொண்டார்.

இந்த பயிற்சியில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் துவக்க உரையாற்றிய இறையன்பு பேசும்போது 

இந்த பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்கள் இதனை தங்கள் உறவினர்களிடம் கூறாமல் ரகசியம் காறுங்கள்,ஏனெனில் நமக்கு தடையான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த கூடும்.அது நமக்கு முட்டுக்கட்டையாக அமையும் ஜெயித்து விட்டு விழா கூட எடுக்கலாம்.

தமிழ்நாடு அரசு தேர்வுகளை மட்டும் எழுதாமல் மத்திய அரசு தேர்வுகளையும் மாணவர்கள்  எழுதவேண்டும்.கண்டிப்பாக அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.அப்போதுதான் வங்கி,ரயில்வே உள்ளிட்ட பணிகளில் சுத்த தமிழில் பணியாற்றும் நபர்களை பார்க்கமுடியும்.எந்த வயதிலும் படிக்கலாம் படிப்பதற்கு வயது தடையில்லை.

படிப்பதை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து நிதி உதவி மற்றும் பல்வேறு உதவிகளை செய்த. தொழிலதிபர் ரெட்டம் பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் கே முரளி. தொழிலதிபர்கள் ஏ வி.முனிராஜ் தமிழரசு.சங்கர் எஸ் எம் ஸ்ரீதர் சங்கர்  அக்கு பஞ்சர் அக்ஷயா சுகுணா. உள்ளிட்டவர்களுக்கு..கௌரவிக்கும் விதத்தில் காந்தி சிலைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கௌரவ அழைப்பாளராக கவிஞர் ஜான் தன்ராஜ் மற்றும் காந்தி வேர்ல்ட் ஃபவுண்டேஷன் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் , ஜீவிதா ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் சேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.




Post a Comment

0 Comments