பெரியகுளம் அருகே நூலகர் மற்றும் வாசகர் வட்டத்தினருக்கு பாராட்டு விழா


தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் , நூலக வாசகர் வட்டம் மூலம் நூலகருக்கும் புரவலர்களுக்கும் வாசகர் வட்டம் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், வாசகர் வட்ட தலைவர்  மோகன் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.  நூலகர் ராஜகோபால் அனைவரையும் வரவேற்புரையாற்றினார்.   

பொறியாளர் சந்திரமோகன்,  வழக்கறிஞர் காமராஜ்,  ஊராட்சி மன்ற செயலாளர் லெனின், பொறியாளர் இராஜாமணி, முன்னாள் இராணுவம் ஜெயராமன் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்து முன்னுரையாற்றினார்.  நம்மால் முடியும் நலசேவை சங்கம் பொறுப்பாளர்களும் புரவலருமான இப்ராஹிம் பாஷா,  மாரிமுத்து  புரவலர்  கண்ணன் (எ) முத்துவேல்பாண்டியராஜன், தெ. கள்ளிப்பட்டி நூலக வாசகர் வட்ட தலைவரும்  கவுன்சிலருமான புரவலர் தேவராஜ்,  நேசம் தொண்டு நிறுவன இயக்குனர் நேசம் முருகன்,  மேல்மங்களம் நூலக வாசகர் வட்ட தலைவர் எழுத்தாளர் நீல பாண்டியன்  புரவலர்கள் ஆலிம் அகமது முஸ்தபா மணிபூசாரி  ,  முருகன்,  பந்தல் குமார், பணித்தள பொருப்பாளர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

 இந்த நிகழ்வில் நூலகர்க்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறந்த சேவையாளருக்கான சிறந்த நூலகர் விருதும் வழங்கப்பட்டது   புதிய நூலக  புரவலர்களாக மு. தேவராஜ். நா ஆண்டவன் செல்வி பிரவினா.  திருமதி சுப்புலட்சுமி சஞ்சீவி நாதன் ஜெகன்.   சுந்தர் ,       ராஜ்குமார்,  ஆசிரியை சந்திரா,  மங்கையர்கரசி ஆகிய எட்டு நபர்களும் தலா  ரூ. 1000 /- செலுத்தி நூலகப் புரவலராக தன்னை இணைத்துக்கொண்டார்.  நிகழ்வின் நிறைவாக நூலகர்  பாண்டிய செல்வி நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments