சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் அரசுக்கு சொந்தமாக தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நாளொன்றுக்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர், இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை, கழிவு நீர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது, இந்த கால்வாயில் நீர் மூடிகள் உடைந்து சிதலமடைந்து காணப்படுவதுடன் ஆங்காங்கே பள்ளங்களாக காணப்படுகிறது.
இந்த கால்வாயில் வழியாக செல்லும் கழிவு நீர் முற்றிலும் மாசடைந்து கொசு, பாம்பு போன்ற விஷ சந்துக்கள் நிறைந்து காணப்படுவதால், இங்கு வரும் மருத்துவ பயனாளிகள், மருத்துவ சிகிச்சை பெற்ற பின்பு, தொற்று நோயுடன் செல்வதாக கூறுகின்றனர், இது பற்றி மாவட்ட மருத்துவமனை நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாகவும் மருத்துவ பயனாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை என்பது பாதுகாப்பு நிறைந்து காணப்பட வேண்டும், ஆனால் அச்சத்துடனே மருத்துவ பயனாளிகள் வந்து செல்லும் நிலை காணப்படுகிறது, ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசின் மருத்துவமனைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



0 Comments