கமுதி அருகே சேர்ந்தகோட்டையில் பழுந்தடைந்த பாலத்தில் ஓட்டை விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்


ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி யூனியனுக்கு உட்பட்ட , பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்தகோட்டை கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.சுற்று வட்டார பகுதிகளிலேயே இப்பகுதி மக்கள் தான் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் பருத்தி, மிளகாய், சோளம் உட்பட ஏராளமான பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.இப்பகுதி விவசாயத்திற்கு பேரையூர் கண்மாயிலிருந்து பாசன நீர் வரத்து கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் வருகிறது.

சுமார் 7 கி.மீ க்குமேலாக இருக்கும் இந்த நீர் வரத்து கால்வாய் பக்க வாட்டு சுவர்கள் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும் கழிவு நீர் வாறுகால் இல்லாததால் இந்த நீர் வரத்து கால்வாயில் தேங்கியிருப்பதைஇந்த சேர்ந்தகோட்டை கிராம மக்கள் வருடம் ஒருமுறை விவாசய காலங்களில், தங்களது சொந்த செலவில் தூர்வாரி சீரமைத்து வருகின்றனர்.மேலும் இந்த கிராமத்தின் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் மீதுஉள்ள பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனது என்பதால்,பாலத்தில் மிகப் பெரிய ஓட்டை விழுந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பலமுறை ஏராளமான வாகன ஓட்டிகள் விபத்துக்கு ஆளாகி உள்ளனர்.இந்த பாலத்தை கடந்து தினமும் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

மேலும் விவசாய விளை பொருட்களை, இந்த பாலத்தின் மீது வாகனங்கள் மூலமாக கொண்டு வருவதற்கு விவசாயிகள் அச்சமடைந்து நெடுந்தூரம் சுற்றி கொண்டு செல்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தபயனும் இல்லை என்றும்,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு புதிய பாலம் மற்றும் நீர்வரத்து கால்வாய்க்கு பக்கவாட்டு சுவர் அமைத்துத் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments