இராமநாதபுரம் : மீனவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார் எம்எல்ஏ



இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றார்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின்குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, திமுகழக அரசு எப்போதும் அவர்களுடன் துணையாக நிற்கும் என்ற உறுதியை வழங்கி ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments