பொன்னேரி: சுகாதாரமற்ற குடிநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்..... அரசு பேருந்துகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்....



திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தத்தைமஞ்சி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் விட்டு விட்டு விநியோகிக்கப்படும் குடிநீர் ஆனது, மஞ்சள் நிறத்தில் வருவதால் அதனை பயன்படுத்தவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அப்பகுதி வாக்குகள் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நோய் தொற்று பரப்பும் குடிநீரை ஆய்வுக்கு அனுப்ப வலியுறுத்தியும், சீரான குடிநீர் வழங்க கோரியும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு-மீஞ்சூர் அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக பழவேற்காடு-மீஞ்சூர் செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments