திமுக கவுன்சிலருக்கு பதிலடி கொடுத்த தவெகவினர்..... வீடுதோறும் விசில் அடித்து தவெக விற்கு ஆதரவு திரட்டிய மகளிர் அணியினர்......



சிவகங்கை 21வது வார்டில் நேற்று திமுக நகராட்சி கவுன்சிலர் அயூப்கான் தனது பகுதிக்கு விசில் ஊதி குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்களுக்கு விசிலை வாங்கி கொண்டு ஒளிபெருக்கியை வழங்கி தங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்க கூடாது என பேசிய வீடியோ வைரல் ஆனது. 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகங்கை நகர் தவெகவினர் மற்றும் மகளிர் அணியினர் 21வது வார்டு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் விசில் ஊதி தவெக-விற்கு ஆதரவு கோரினர். மேலும் மக்களிடத்தில் அனுமதி பெற்று  விஜய் படம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டினர். தொடர்ந்து சிறுவர்களுக்கு விசிலை அன்பளிப்பாக கழுத்தில் அணிவித்தனர். சிறுவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு உற்ச்சாகமாக விசிலை ஊதி சென்றனர். 


இது குறித்து தவெக மகளிர் அணியினர் கூறும் போது, நேற்று எங்களது விசில் சின்னத்தை அவமதிக்கும் விதமாக தூய்மை பணியாளிடம் வாங்கிய சம்பவம், தங்களை அவமதிப்பாக எண்ணுவதாகவும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று விசில் ஊதி மக்களிடத்தில் ஆதரவு கோரியதாகவும், பெருவாரியான மக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், மேலும் எங்களை எதிர்க்க எதிர்க்க நாங்கள் வளர்கின்றோம் என தெரிவித்தனர்.

தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களை முன்னிருத்த வித்தியாசமாக முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மோதல் போக்கினை கடை பிடிக்காமல், ஆரோக்கியமான போட்டியினை கடைப்பிடித்தால், அதனை மக்களும் ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Post a Comment

0 Comments