திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தங்க நாணயமும், மலேசியாவிற்கு சுற்றுலா செல்வதற்கான ஆணையையும் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியில் உறைய வைத்த பள்ளி தாளாளர்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் செயல்படும் சேது ஐராணி  பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் ரேசாரியோ பிரின்ஸ், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் வரவேற்பு உரை நிகழ்த்தினார். இவ்விழாவிற்கு சென்னை சோக்கா இக்கேதா கல்லூரி செயலாளர் கோகிலா குமணன், துணை முதல்வர் கண்மணி, சேது பாஸ்கரா கழுவி குழும போக்குவரத்து மேலாளர் மாணிக்கவாசகம், பொருளாளர் திருநாவுக்கரசு, கட்டிட மேலாளர் அமுதா, ஆகியோர் முன்னிலை வகிததனர்.

தொடர்ந்து இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி மகாரிஷி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சேதுராமன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக விலங்கு சுகாதார மேலாண்மை உதவி பேராசிரியர் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர். அதனைதொடர்ந்து சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனரும், இப்பள்ளியின் தாளாளருமான சேது குமணன் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் அலுவலக பணியாளர்களுக்கும்  4 கிராம் எடையுள்ள தங்க நாணயமும், மலேசியாவிற்க்கு இன்ப சுற்றுலா செல்வதற்கான ஆணையையும் வழங்கி இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

 இந்நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் மகிழ்ச்சியில் உறைந்து போனவர்களாக பள்ளி தாளாளருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments