சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில், அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ.57 ஆயிரத்து 700 ஊதியத்தை வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு, இறக்கும் விரிவுரையாளர்களுக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம், 12 மாதங்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புக்களை புறக்கணித்து கண்களை கருப்பு துணியால் கட்டு கொண்டு காலவரையற்ற ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களான நாங்கள் அரசால் மலிவான விரிவுரையாளர்களாக நடத்தப்படுகின்றோம்.சிறந்த கல்வியை பெற்றுதான் வந்துள்ளோம். நிரந்தர பேராசிரியர்கள் பணிபுரிவதை போலவே, நாங்களும் பணிபுரிகின்றோம். ஆனாலும் வஞ்சிக்கப்படுகிறோம்.
அன்றாட அடிப்படை தேவைகளையோ, குழந்தைகளின் விருப்பங்களையோ கூட நிறைவேற்ற முடியவில்லை, மருத்துவ செலவுகளுக்குகூட இந்த சம்பளம் பத்தவில்லை. தமிழக அரசு எங்களை மட்டும் வஞ்சகமாக பழிவாங்குகிறது என வேதனையோடு தெரிவித்தனர்.


0 Comments