சிங்கம்புணரியில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்

 


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு,தெற்கு, ஒன்றிய நகர திமுக சார்பில்  வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மதுரை திண்டுக்கல், சிவகங்கை, தேனி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 126 வீரர்கள் கலந்து கொண்டனர். 

வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளைகளை 9 பேர் அந்தக் குழுவினர் 20நிமிடங்கள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசு, மற்றும் ஆட்டுக்குட்டி, தென்னங்கன்று, கட்டில் சைக்கிள், போன்ற பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்  . இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பூமணி, நகரச் செயலாளர் கதிர்வேல், நகர அவைத் தலைவர் சிவகுமார், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல்அணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், புகழேந்தி, குடோன் சுப்பிரமணி, ராமலிங்கம், இளைஞர் அணி செயலாளர் மனோகரன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகர் கழக நிர்வாகிகள் சார்புஅணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இப் போட்டியை காண திருப்பத்தூர் ,காரைக்குடி ,திண்டுக்கல் ,மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Post a Comment

0 Comments