சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கடம் புறப்பாடுடன் விமானத்தில் ஏறிச்சென்று வேத மந்திரங்கள் முழங்க புனித அபிஷேக நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் மீதும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் ,குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பையூர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

0 Comments