ராமநாதபுரம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ வழங்கினார்


துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  இராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான . காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்கிற  நோக்கத்தோடு தனது சொந்த நிதியில் இருந்து தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மண்டபம் கிழக்கு ஒன்றியம்  வேதாளை ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி திராவிட  ஆட்சியின் மகத்துவத்தால் வளர்ந்து வருகிற முகவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை எடுத்துக்கூறி திராவிட மாடல் ஆட்சி 2.0 மீண்டும் தொடர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். உடன் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments